மலேசியா அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர மசோதா Prime Minister term limit | Malaysia
மலேசியாவில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அன்வர் இப்ராஹிம் கடந்த 2022ல் முதல் முறையாக பிரதமர் பதவிக்கு வந்தார். கூட்டணி அரசில் ஜனநாயக செயல் கட்சிDemocratic Action Party (DAP) முக்கிய இடம் வகிக்கிறது. அக்கட்சிக்கு 40 எம்பிக்கள் உள்ளனர். ஆளும் கூட்டணியில் அதிக எம்பிக்கள் கொண்ட கட்சியாக இருக்கிறது. மலேசிய பார்லிமன்டில் பெரும்பான்மை ஆதரவு இருக்கும் வரை, ஒருவர் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும், பிரதமராக நீடிக்கலாம். ஆனால், இதை 10 ஆண்டுகளாக வரைமுறைப்படுத்த அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டுமென ஜனநாயக செயல் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதை ஏற்று பிரதமர் இப்ராஹிம் தலைமையிலான அரசு அதற்கான மசோதவை பார்லிமென்டில் தாக்கல் செய்தது. அதன்படி, மலேசியா பிரதமர் 10 ஆண்டுகள் மட்டுமே அப்பதவியில் நீடிக்க முடியும். அதன் பின் அவரும், அவரது அமைச்சரவையும் பதவி விலக வேண்டும்.