உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜ செயலை பொறுக்க மாட்டோம் நாடு தழுவிய போராட்டம்: கார்கே rahul| mallikarjun kharge| parliament

பாஜ செயலை பொறுக்க மாட்டோம் நாடு தழுவிய போராட்டம்: கார்கே rahul| mallikarjun kharge| parliament

பார்லிமென்ட் வளாகத்தில் பாஜ மற்றும் எதிர்கட்சி எம்பிக்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தில் 2 பாஜ எம்பிக்கள் தலையில் காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் பேட்டி அளித்தார். சில தினங்களுக்கு முன்பு பார்லிமென்டில் அதானி வழக்கு குறித்து விவாதம் எழுந்தபோது, பாஜ அதை நிறுத்த முயன்றது. அதானி பற்றி பார்லிமென்டில் விவாதிக்க கூடாது; அதை அப்படியே அடக்கிவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம். அதன் பிறகுதான் அமித்ஷா, அம்பேத்கர் பற்றி அப்படி பேசியிருக்கிறார். பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ்சின் சிந்தனைகள் அரசியலமைப்பு மற்றும் அம்பேத்கருக்கு எதிராகவே இருக்கிறது என்பதை நாங்கள் ஆரம்பத்தில் முதலே சொல்லி வருகிறோம். அம்பேத்கரின் நினைவுகள், அவரின் பங்களிப்பை அழிக்க பாஜ நினைக்கிறது. அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன், ராஜினாமா செய்ய வேண்டும். இன்று அவர்கள் மீண்டும் புதிய திசை திருப்புதலை தொடங்கி இருக்கிறார்கள்.

டிச 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை