உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்; கடும் டிராபிக் ஜாம் | Mamallapuram | Traffic Jam |New year

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்; கடும் டிராபிக் ஜாம் | Mamallapuram | Traffic Jam |New year

கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். தொடர் விடுமுறை முடிந்து ஏராளமான மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பினர். அதுமட்டுமின்றி ஏராளமானோர் புத்தாண்டை முன்னிட்டு சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர். அனைவரும் ஒரே நேரத்தில் சென்னை நகருக்குள் நுழைய முயன்றதால் வாகன நெரிசலால் ஜிஎஸ்டி சாலை திணறியது. பெருங்களத்தூர் மேம்பாலத்தில் வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. ஊர்ந்தபடியே சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஜன 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை