உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயிற்சி இன்றி அலைக்கழிப்பு: எஸ்ஐஆர் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் மீது மம்தா காட்டம் Mamata writes le

பயிற்சி இன்றி அலைக்கழிப்பு: எஸ்ஐஆர் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் மீது மம்தா காட்டம் Mamata writes le

தமிழத்தை போலவே மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணி நடந்து வருகிறது. எஸ்ஐஆர் விண்ணப்பங்களுடன் பிஎல்ஓக்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சேகரித்து வருகின்றனர். டிசம்பர் 4ம் தேதிக்குள் எஸ்ஐஆர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், இப்பணி தீவிர கதியில் நடந்து வருகிறது. இந்நிலையில், எஸ்ஐஆர் விவாரத்தில் உரிய பயிற்சி அளிக்காமல் ஊழியர்கள் அலைக்கழிக்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனருக்கு மம்தா பானர்ஜி எழுதிய கடித்தில் கூறியிருப்பதாவது: எஸ்ஐஆர் நடைமுறையை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அதில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி இல்லை என்பதை பதிவு செய்கிறோம். உரிய பயிற்சி இல்லாத காரணத்தால், பலருக்கு அந்த படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி எனத் தெரியவில்லை. ஆன்லைன் படிவத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் வாக்காளர்களுக்கு புரிவதில்லை. அதுபற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலான பிஎல்ஓக்கள் ஆசிரியர்கள் அல்லது முன்களப் பணியாளர்களாகவே உள்ளனர். அவசர கதியில், எஸ்ஐஆர் பணியை மேற்கொள்வதால், அவர்களின் பிரதான பணியில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. தங்கள் அடையாளம், இருப்பிடத்திற்கான ஆதார ஆவணங்களாக எதை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புரிதல் வாக்காளர்களிடம் இல்லை. அது பற்றி பிஎல்ஓக்களுக்கும் முழு அளவில் பயிற்சி அளிக்கப்படவில்லை. #StopSIR| #TMC| #Westbengal| #Specialintesiverevision| #ECI| ElectionCommission|

நவ 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ