மேற்குவங்க டாக்டர்களுக்கு மம்தா இறுதி அழைப்பு | Mamata Banerjee | Kolkata doctor Case
கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு ஆஸ்பிடலில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு மேற்குவங்க பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க சுகாதார துறையின் தலைமையகம் வெளியே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மருத்துவ கட்டமைப்பு ஸ்தம்பித்து போனது. பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு மம்தா நேரடியாக வர வேண்டும். டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை விடுத்தனர். முதல்வர் நேரடியாக பங்கேற்பார் என அறிவித்த மேற்கு வங்க அரசு நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது என அறிவித்தது. இதை தொடர்ந்து டாக்டர்கள் போராட்டம் நடத்தி வரும் இடத்துக்கு கடந்த செப்டம்பர் 14 அன்று மம்தா நேரில் வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பணிக்கு திரும்ப சொன்னார். யார் மீதும் நடவடிக்கை எடுக்க மாட்டோம். சமாதானத்துக்காக நான் மேற்கொள்ளும் கடைசி முயற்சி இது என கூறினார். மம்தாவின் வருகையை வரவேற்ற டாக்டர்கள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினர். ஆனால் கோரிக்கைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என தெரிவித்தனர். மம்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என உறுதியாக கூறினர். இந்நிலையில் போராட்ட குழுவினருக்கு மேற்குவங்க தலைமை செயலாளர் மனோஜ் பான்ட் மெயில் அனுப்பி உள்ளார். அதில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி டாக்டர்கள் தங்களது பணியை துவங்க வேண்டும்.