சியெம் குடும்பத்தில் சம்பவம் நடந்திருந்தால் இப்படி சொல்வாரா? | Mamatha | kolkatta doctor Case
மம்தா பொய் சொல்கிறார் டாக்டர் பெற்றோர் கொதிப்பு! பணம் தர முன்வந்தது உண்மை மேற்குவங்கம் கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் போலீசார் உண்மையை மூடி மறைக்க முயற்சிப்பதாக டாக்டரின் பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர். உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் பணம் தர முயன்றதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். இது தொடர்பாக பதிலளித்த முதல்வர் மம்தா, டாக்டர் குடும்பத்துக்கு பணம் கொடுக்க ஒருபோதும் முன்வரவில்லை. இது அவதூறு தவிர வேறில்லை என சொன்னார். தங்கள் மகளின் நினைவாக ஏதாவது செய்ய விரும்பினால் அரசு அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் என்றுதான் சொன்னேன் என்றார். முதல்வர் மம்தா சொல்வது பொய் என்று டாக்டரின் பெற்றோர் கூறினர். தங்கள் மகள் மரணத்தை தொடர்ந்து முதல்வர் பணம் கொடுக்க முன்வந்தார். என் மகள் இனி திரும்பி வரப்போவது இல்லை. நாங்கள் எதற்காக பொய் சொல்ல வேண்டும் என்று டாக்டரின் தாய் கேட்டார். பணம் பெற்று தருவதாக சொன்ன முதல்வர் மம்தா, மகளின் நினைவாக ஏதாவது ஒன்றை உருவாக்க பரித்துரைத்தார். என் மகளுக்கு நீதி கிடைத்த பின் முதல்வர் அலுவலகம் வந்து பணத்தை பெற்று கொள்கிறேன் என்று கூறினேன் என டாக்டரின் தாய் கூறினார். துர்கா பூஜை நெருங்குவதால் அனைவரும் விழாக்களுக்கு திரும்ப மக்களை ஊக்கப்படுத்தும் முதல்வர் மம்தா, டாக்டர் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் உள்ள ஜூனியர் டாக்டர்களும் வேலைக்கு திரும்ப கேட்டுக்கொண்டுள்ளார்.