உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொல்கத்தா டாக்டர்கள் போராட்டத்தை முடிக்க போராடும் மம்தா Mamtha Banerjee| CM WB| Protestors | Camp

கொல்கத்தா டாக்டர்கள் போராட்டத்தை முடிக்க போராடும் மம்தா Mamtha Banerjee| CM WB| Protestors | Camp

கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் ஆகஸ்ட் 9-ல் பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலைக்கும் ஆளானார். போலீசுடன் தன்னார்வலராக வேலை பார்த்த சஞ்சய் ராய் என்ற கொடூரனை போலீஸ் கைது செய்தது. சிபிஐ இந்த வழக்கை விசாரிக்கிறது. நடந்த சம்பத்துக்கு நியாயம் கேட்டு மாநில சுகாதார அமைச்சகம் முன்பு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தா போலீஸ் கமிஷ்னர் வினீத் கோயலை மாற்ற வேண்டும், பெண் மருத்துவருக்கு இழைக்கப்பட்ட அநீதியில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பது உள்பட 5 முக்கிய கோரிக்கைகளை மருத்துவர்கள் வலியுறுதுகின்றனர். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட், போராடுவோர் செப்டம்பர் 10க்குள் பணிக்கு திரும்ப உத்தரவிட்டும், அதை கேட்காமல் போராடுகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர படாத பாடுபட்டு வருகிறது.

செப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ