உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடன் வாங்கிய மகன் ஓடிவிட அப்பாவை கடத்திய கும்பல்: பரபரப்பு man abducted| cuddalore| crime

கடன் வாங்கிய மகன் ஓடிவிட அப்பாவை கடத்திய கும்பல்: பரபரப்பு man abducted| cuddalore| crime

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் நடராஜன் (71). இவரது மகன் மணிகண்டன் மளிகை கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்யும் மொத்த வியாபார தொழில் செய்து வந்தார். வியாபாரத்தை பெருக்குவதற்காக பழனிசாமி என்பவரிடம் சில ஆண்டுகளுக்கு முன் 6 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வட்டிக்கு வட்டி வட்டிக்கு வட்டி என குட்டி போட்டு, 63 லட்ச ரூபாயாகி விட்டது என பழனிசாமி குண்டை தூக்கி போட்டுள்ளார். கட்ட முடியாது என மணிகண்டன் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் மணிகண்டனுக்கும் பழனிசாமிக்கும் ஆண்டுக்கணக்கில் பிரச்னை நடந்தது. சிதம்பரத்தை விட்டு கடலூருக்கு மணிகண்டன் குடிபெயர்ந்தார். அங்கு வந்தும் பணத்தை கேட்டு சண்டை போட்டார், பழனிசாமி. இதனால் யாரிடமும் சொல்லாமல் இரவோடு இரவாக குடும்பத்தோடு சீர்காழிக்கு குடிபெயர்ந்தார், மணிகண்டன். திடீரென மணிகண்டன் குடும்பம் காணாமல் போனதால், அவரை பழனிசாமி தேடி வந்தார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தொழில் செய்து வருவது தெரிய வந்தது. பழனிசாமியின் அடியாட்கள் 5 பேர் நேற்று பணத்தை வசூல் செய்வதற்காக காரில் சீர்காழிக்கு சென்றனர். வீட்டில் மணிகண்டன் இல்லை. நடராஜன்மட்டும் இருந்தார்.

ஜூன் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை