உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மனித வேட்டையாடும் ஓநாயை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்! Man-eater Wolf | Wolf at Uttarpradesh | Bahir

மனித வேட்டையாடும் ஓநாயை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்! Man-eater Wolf | Wolf at Uttarpradesh | Bahir

மக்களை அலற வைக்கும் 6வது ஓநாய் சிக்குமா? உத்தரபிரேதசத்தின் பஹ்ராய்ச் மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து வயல்வெளிகளுக்குள் புகுந்த ஓநாய் கூட்டம், அங்குள்ள குழந்தைகள், முதியவர்களை வேட்டையாட துவங்கின. இரவு நேரங்களில் குடிசை வீடுகளில் படுத்துறங்கிய பச்சிளம் குழந்தைகளை கவ்விச் சென்ற ஓநாய்கள் அவற்றை தங்கள் இரையாக்கின. சுற்றுவட்டார கிராமங்களில் ஓநாய்களின் நடமாட்டம் அதிகரித்ததை அடுத்து, வனத்துறைக்கு தகவல் தரப்பட்டது. எனினும், வனத்துறையினரின் கண்ணில் மண்ணைத் துாவிய ஓநாய்கள், 9 குழந்தைகள், 1 பெண் என 10 பேரை வேட்டையாடி இரையாக்கிக் கொண்டது. ஓநாய்கள் தாக்குதலுக்கு ஆளாகி 40 பேர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். மொத்தம் 6 ஓநாய்கள் சுற்றித்திரிந்த நிலையில், உள்ளூர் போலீசார், வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 4 ஓநாய்கள் கூண்டில் சிக்கின. மீதமுள்ள 2 ஓநாய்கள் வனத்துறையினருக்கு போக்குக் காட்டி வந்தன. ஓநாய்களுக்கு யானைகளைக் கண்டால் அலர்ஜி என்பதால், அவை நடமாடும் பகுதிகளில் யானை சாணம் மற்றும் அதன் சிறுநீர் தெளிக்கப்பட்டன. ஆயினும், யானை சாணம் தெளிக்கப்பட்ட கிராமங்களை விடுத்து, பக்கத்து கிராமங்களுக்குள் நுழைந்த ஓநாய்கள் அங்கும் மனித வேட்டையை தொடர்ந்தன. கேமராக்கள் பெருத்தியும், ட்ரோன்கள் மூலமும் ஓநாய்கள் நடமாட்டத்தை கண்காணித்த வனத்துறையினர், திங்கள் நள்ளிரவு 5வது ஓநாயை பிடித்தனர். இது, முன்பு பிடிபட்ட ஓநாய்களை விட ஆக்ரோஷமாக இருப்பதாக வனத்துறையினர் கூறினர்.

செப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை