உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாம்பழ உற்பத்தியில் கோவை விவசாயி புகுத்திய புதுமை | Mango | Mango Coimbatore | Farmer Thangavel

மாம்பழ உற்பத்தியில் கோவை விவசாயி புகுத்திய புதுமை | Mango | Mango Coimbatore | Farmer Thangavel

மாம்பழ உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. உலகளவில் 42 சதவீத அளவிற்கு அதாவது 2 கோடி டன் அளவிற்கு மாம்பழங்கள் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இந்தியாவுக்கு அடுத்து சீனா, தாய்லாந்து, மெக்சிகோ மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடம் பிடிக்கின்றன. உலகில் 500க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உள்ளன. தமிழகத்தில் விளையும் அல்போன்சா வகை மாம்பழம் மிகுந்த சுவையானது. மல்கோவா, கூழ் நிறைந்தது. பங்கனப்பள்ளி இனிப்பு மிகுந்தது. செந்துாரம், நீலம், இமாம் பசந்த் போன்றவை மக்களிடத்தில் பிரபலமானவை. மாம்பழ நுகர்விலும் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. உள்நாட்டு நுகர்வு, ஏற்றுமதியை விட அதிகமாகும். இன்று தமிழகத்தில் மா சகுபடி பரபப்பளவு குறைந்து காணப்பட்டாலும், வறட்சியான தனது நிலத்தில் மாம்பழ சாகுபடியில் அசத்தி உள்ளார் கோவை விவசாயி தங்கவேல்

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை