மணிப்பூரில் ராணுவம் நடத்திய அதிரடி வேட்டை | Manipur | CRPF | Manipur Police
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இடஒதுக்கீடு தொடர்பாக மெய்டி மற்றும் கூகி சமூகத்தினருக்கு இடையே 2023 மே மாதத்தில் மோதல் ஏற்பட்டது. 21 மாதங்களாக நீடித்து வரும் மோதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே மணிப்பூர் முதல்வராக இருந்த பாஜவின் பைரேன் சிங் பதவியை ராஜினாமா செய்தார். மாநிலத்தில் குழப்பத்தை தடுக்க, சட்டசபை முடக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் இம்பாலில் உள்ள கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு மற்றும் தவுபால் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த ராணுவம் இறக்கப்பட்டுள்ளது.