வாகனங்கள் மீது ஆயுத கும்பல் சரமாரியாக துப்பாக்கிசூடு manipur| gunmen open fire at assam rifles| att
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து, அசாமை சேர்ந்த துணை ராணுவப்படையை சேர்ந்த 30க்கு மேற்பட்ட வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். பிஷ்னுபூர் மாவட்டத்தின் நம்போல் சபால் லெய்கய்(Nambol Sabal Leikai) என்ற இடத்தில் வந்தபோது, அங்கு பதுங்கி இருந்த ஆயுதம் ஏந்திய கும்பல், பாதுகாப்புபடையினர் வாகனம் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் 2 வீரர்கள் மரணம் அடைந்தனர். 4 பேர் உடலில் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். அந்த கும்பல் தப்பியோடியது. போலீசாரும், உள்ளூர் மக்களும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த கூடுதல் பாதுகாப்பு படையினர், அந்த இடத்தை சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு மணிப்பூர் கவர்னர் அஜய்குமார் பல்லா கடுமையான கண்டனம் தெரிவித்தார். உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறினார். இதுபோன்ற கொடூரமான வன்முறை செயல்களை எந்த சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது எனக்கூறிய கவர்னர் அஜய், மணிப்பூரில் அமைதி, ஸ்திரத்தன்மையை பாதுகாக்க அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இத்தாக்குதலை மணிப்பூர் முன்னாள் முதல்வர் பிரேன் சிங்கும் கண்டித்தார். இது மாநிலத்துக்கு விழுந்த கொடூரமான அடி என கூறினார். மணிப்பூரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு இனக்குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் கவரமானது. அதில் 200க்கு மேற்பட்டோர் இறந்தனர். மோதல்களை தடுக்க பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். மெல்ல அமைதி திரும்பி வரும் நிலையில், சமீபத்தில்தான் பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று வந்தார். இச்சூழலில், நடந்த இந்த தாக்குதல் மணிப்பூரை மீண்டும் பரபரப்பாக்கி உள்ளது. #AssamRifles #ManipurAttck #AttackOnJawansVechicle #GunmenOpenFireAtJawans #FiringOnConvoy #BishnupurAttack