/ தினமலர் டிவி
/ பொது
/ மணிப்பூர் கலவரத்தை முறியடிக்க கவசம் தயார் | Manipur issue | meitei vs kuki | manipur issue video
மணிப்பூர் கலவரத்தை முறியடிக்க கவசம் தயார் | Manipur issue | meitei vs kuki | manipur issue video
மணிப்பூரில் 2023 மே மாதம் கூகி, மெய்டி சமூக மக்கள் இடையே இனக்கலவரம் வெடித்தது. 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நாட்டை உலுக்கிய இந்த கலவரம், உலக அளவில் பேசப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் படிப்படியாக அமைதி திரும்பிய மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடிக்க துவங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறை இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களை ஏந்தி தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் ஜிரிபாம் மாவட்டத்தில் ராணுவம் போல் கூகி இனத்தினர் ட்ரோன், ராக்கெட் லாஞ்சர் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
செப் 09, 2024