மணிப்பூரை கட்டுக்குள் கொண்டுவர திட்டம் | Manipur Violence | Jiribam district
மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே வெடித்த மோதல் மீண்டும் வன்முறையாக மாறி உள்ளது. இரு பிரிவினருக்கும் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல் அவ்வப்போது மீண்டும் தொடர்ந்து வந்தது. இம்மாதம் தொடக்கத்தில் குக்கி சமூகத்தினர் தாக்குதலை தீவிரப்படுத்தினர். குக்கி சமூகத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய சில கலவரக்காரர்கள் மெய்தி சமூக மக்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். பெண் ஒருவர் கடத்தி கொல்லப்பட்டார். விவசாயிகள் மீதும் தாக்குதல் நடத்தினர். கடந்த வாரம் சிஆர்பிஎப் முகாம் மீதும் இந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. சிஆர்பிஎப் வீரர்கள் கொடுத்த பதிலடியில் கலவரம் செய்த 11 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். கலவரத்தின் நடுவே மெய்தி சமூகத்தை சேர்ந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 6 பேரை கடத்தி சென்றனர்.