/ தினமலர் டிவி
/ பொது
/ ட்ரோன், ராக்கெட் மூலம் தாக்கும் மணிப்பூர் போராளிகள் Manipur violence again Anti drone system
ட்ரோன், ராக்கெட் மூலம் தாக்கும் மணிப்பூர் போராளிகள் Manipur violence again Anti drone system
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இட ஒதுக்கீடு தொடர்பாக, கூகி - மெய்டி பிரிவினரிடையே, கடந்த ஆண்டு மே மாதம் மோதல் வெடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய - மாநில அரசுகள் எடுத்த முயற்சியால், அங்கு தற்காலிகமாக இயல்புநிலை திரும்பியது. தொடர்ந்து அவ்வப்போது சில இடங்களில் சிறு சிறு வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. பிஷ்ணுபூர் மாவட்டம் மொய்ராங் நகரில் ராக்கெட் மூலம், கூகி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய நபர்கள் சமீபத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் மெய்டி சமூகத்தை சேர்ந்த முதியவர் உட்பட 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
செப் 08, 2024