நாடு முழுவதும் தமிழ் கற்கும் ஆர்வம் அதிகரிப்பு: பிரதமர் மோடி MannKiBaat|Modi|TamilPride
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் “மன் கி பாத் MannKiBaat” என்ற தலைப்பில் நாட்டு மக்களுடன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். இன்று 129-வது மனதின் குரல் ஒலிபரப்பானது. அதில் பிரதமர் மோடி கூறியதாவது பிஜி தீவு மக்கள் தமிழ் தினம் என்ற ஒன்றை உருவாக்கி விழா கொண்டாடுகின்றனர். நமது நாட்டிலும் தமிழ் மொழியை பரப்புவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. என்னுடைய லோக்சபா தொகுதியில் உள்ள காசியில், காசி தமிழ் சங்கமத்தின் நான்காம் ஆண்டு நிகழ்வுகள் சமீபத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இந்தியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள் தமிழில் பேசினர். இதற்காக காசியில் 50 பள்ளிகளில் தமிழ் கற்கலாம் என்ற மையப் பொருளில் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட்டது. தமிழ் மொழி உலகின் மிகவும் பழமையான மொழி. தமிழ் இலக்கியம் மிகவும் வளமானது. காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கெடுத்துக்கொள்ளுங்கள் என்று நான் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் உங்களை எல்லாம் கேட்டுக் கொண்டேன். இன்று இந்த தேசத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள், இளைஞர்களிடம் தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இதுதான் தமிழ் மொழியின் பலம், இதுதான் பாரதத்தின் ஒற்றுமை என்று பிரதமர் மோடி கூறினார்.