உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கஞ்சா வழக்கில் சிறை செல்லும் மகனுக்கு மன்சூர் அட்வைஸ் | Mansoor Ali Khan | Mansoor Ali Khan Son

கஞ்சா வழக்கில் சிறை செல்லும் மகனுக்கு மன்சூர் அட்வைஸ் | Mansoor Ali Khan | Mansoor Ali Khan Son

சென்னை ஜெ.ஜெ நகரில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவரை கடந்த நவம்பர் 3ம் தேதி போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கிவந்து, காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. கஞ்சா மட்டுமின்றி மெத்தம்பெட்டமைன் போதைப் பொருட்களும் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மாணவனின் செல்போன்களில் உள்ள எண்களை கொண்டு தனிப்படை போலீசார் தொடர்ந்து துப்பு துலக்கினர். இதில் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் எண்ணும் இருந்தது. அலிகான் துக்ளக், அவரது நண்பர்கள் ஏழு பேரை தனிப்படை போலீசார் ஜெ.ஜெ நகர் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் மன்சூர் அலிகான் மகன் போதை பொருள் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. அவரது நண்பர்களுக்கும் வாங்கி கொடுத்துள்ளார். இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக், அவரது நண்பர்கள் சையது ஷாகி, முகமது ரியாஸ் அலி, பாசில் அஹமது, குமரன், முகேஷ் சந்தோஷ் என 7 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி பரம்வீர் ஏழு பேருக்கும் 15 நாள் கோர்ட் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சிறையில் அடைக்கப்படுவதுக்கு முன் மகனை சந்தித்த மன்சூர் அலிகான் கஞ்சா குடிச்சா போலீஸ் அரெஸ்ட் பண்ணும்னு தெரியாதா? என கேட்டார். தைரியமா இரு என அறிவுரை சொல்லி சிறைக்கு அனுப்பிவைத்தார்.

டிச 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை