பலம் இழந்த மாவோயிஸ்டுகள் கதறும் பின்னணி | Maoist | Chhattisgarh | Vijay Sharma | Amit shah
சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் உள்ளது. 2015ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்த மாநிலங்களை சேர்ந்த 35 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாத பிரச்சினை இருந்தது. இதுவே 2018ம் ஆண்டில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 30 ஆகவும், 2021ல் 25 ஆகவும் குறைந்தது. சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்களின்படி 12 மாவட்டங்களில் மட்டுமே மாவோயிஸ்ட் ஆதிக்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மாவோயிஸ்ட் தீவிரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியாக கூறியிருக்கிறார்.