உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பல்வேறு கெட்டப்பில் உளவு பார்த்தவருக்கு நேர்ந்த சோகம் Maoist attack at Telangana| Police Informer |

பல்வேறு கெட்டப்பில் உளவு பார்த்தவருக்கு நேர்ந்த சோகம் Maoist attack at Telangana| Police Informer |

தெலங்கானாவின் முலுகு மாவட்டம் ஜங்கலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஏகா ரமேஷ். மாநில அரசின் கிராம பஞ்சாயத்து செயலராக பணியாற்றிய இவர், மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து போலீசுக்கு தகவல் அளித்து வந்துள்ளார். மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் விறகு வெட்டுபவர், மாடு மேய்ப்பவர், அங்குள்ள குளத்தில் மீன் பிடிப்பவர் போல் நடித்து, அந்த ஊரில் மாவோயிஸ்ட்கள் பற்றிய தகவல்களை சேகரித்து போலீசுக்கு அனுப்பினார். அவர் தந்த தகவல் அடிப்படையில், மாவோயிஸ்ட்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். இதனால் கடுப்பான மாவோயிஸ்ட்கள் சிலர் நேற்று நள்ளிரவு ஏகா ரமேஷின் வீட்டிற்கு சென்று, அவரை கோடாரியால் வெட்டி கொன்றனர். ரமேஷை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் அர்ஜுனுக்கும் வெட்டு விழுந்தது. அவரும் இறந்தார். மாவோயிஸ்ட் இயக்க நிர்வாகி சாந்தா சார்பில் இந்த கொலை நிகழ்த்தப்பட்டதாக கொலையாளிகள் ஒரு கடிதத்தையும் அங்கு விட்டுச் சென்றனர். அதில், மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்த தகவல்களை திரட்டி, போலீசுக்கு தந்ததால், ரமேஷை கொலை செய்ததாக எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து முலுகு மாவட்டம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

நவ 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ