உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓசூரில் ரகசியமாக வாழ்ந்த மாவோயிஸ்ட் தலைவன் சிக்கினான் Maoist movement Kerala last maoist Santhosh

ஓசூரில் ரகசியமாக வாழ்ந்த மாவோயிஸ்ட் தலைவன் சிக்கினான் Maoist movement Kerala last maoist Santhosh

கேரள மாநிலத்தில் வயநாடு, கண்ணூர், மலப்புரம், பாலக்கோடு மாவட்டங்களில் மாவோயிஸ்ட்கள் செயல்பாடு அதிகம் இருந்தது. நாசகார செயல்களை செய்துவிட்டு கர்நாடகா, தமிழக மாநிலங்களில் ஓடி ஒளிந்து கொள்வது மாவோயிஸ்ட்களின் வழக்கம். மாவோயிஸ்ட்களை ஒடுக்க கேரள போலீசின் பயங்கரவாத ஒழிப்புப்படை தொடர் வேட்டை நடத்தியது. கடந்த ஆண்டு மொய்தீன், சோமன், மனோஜ் ஆகிய மாவோயிஸ்ட் தலைவர்கள் கேரளாவின் வெவ்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். இன்னும் சில மாவோயிஸ்ட்களை கேரள போலீஸ் படையினர் சுட்டுக் கொன்றனர். இதில் பெண் மாவோயிஸ்ட்களும் அடக்கம். பலர் சரணடைந்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மொய்தீன், சோமன், மனோஜ் ஆகியோரின் முக்கிய கூட்டாளியாக இருந்த சந்தோஷ் கேரள போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தமிழகத்துக்கு தப்பி ஓடினான். சந்தோஷின் சொந்த ஊர் கோவை. ஆனால், அங்கு சென்றால் தன்னை பிடித்து விடுவார்கள் என நினைத்து ஓசூருக்கு சென்றான்.

பிப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை