உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகாராஷ்டிராவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மொழி அரசியல் Marathi language Politics in Maharashtr

மகாராஷ்டிராவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மொழி அரசியல் Marathi language Politics in Maharashtr

மகாராஷ்டிராவின் மும்பை புறநகர் பகுதியான பயந்தரில் உள்ள பேக்கரி கடைக்கு சென்ற ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மாண் கட்சியினர், கடைக்காரரிடம் பேச்சு கொடுத்தனர். கடைக்காரர் ஹிந்தியில் பதில் அளித்ததால் ஆத்திரமடைந்தனர். மகாராஷ்ட்ராவில் மராத்தி மொழியில்தான் பேச வேண்டும் எனக் கூறி, அவரை கன்னத்தில் அறைந்தனர். கடைக்காரர் மீது தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதலங்களில் வேகமாக பரவியது. கடைக்காரர் அளித்த புகாரின் படி, எம்என்எஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், மொழியின் பெயரால் கடைக்காரர் மீது நடத்த்ப்பட்ட தாக்குதலை கண்டித்து, மும்பை புறநகர் பகுதியான மீரா - பயந்தர் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் மூடிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட எம்என்எஸ் கட்சியினர் மீது நவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வியாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், போலீசில் மனு அளித்தனர். இந்தியாவில் பல மொழி பேசும் மக்கள் பல்வேறு இடங்களில் வசிக்கின்றனர். எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு நிலை இல்லை. மராத்தி பேச வேண்டும் என நினைப்பவர்கள் அதை வலியுறுத்தலாம், கட்டாயப்படுத்தி தாக்குதல் நடத்துவது தவறு. இந்த விவகாரத்தை டில்லி வரை கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில அரசிடம் வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே, மராத்தி மொழி பேசாதவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து, சிவசேனாவை சேர்ந்த மாநில உள்துறை இணை அமைச்சர் யோகேஷ் காதம் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் மராத்தி மொழி பேசுவது கட்டாயம். அது தெரியாதவர்கள், பேச முயற்சிக்க வேண்டும். மராத்தி மொழியை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. அதே சமயம் மாெழியின் பெயரால் தாக்குதல் நடத்தக்கூடாது; மராத்தியில் பேச மறுப்பவர்கள் குறித்து அரசுக்கு தகவல் அளித்தால் நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம் என காதம் கூறினார். அமைச்சர் காதமின் இந்த பேச்சு, மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை