உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மருதமலையில் காட்டு யானைக்கு கும்கி யானை உதவியுடன் சிகிச்சை | Maruthamalai | Elephant Treatment

மருதமலையில் காட்டு யானைக்கு கும்கி யானை உதவியுடன் சிகிச்சை | Maruthamalai | Elephant Treatment

கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலையின் மேற்குப் பகுதியில் நேற்று ஒரு தாய் யானை, அதன் குட்டியுடன் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டு இருந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் கொடுத்தனர். வன அதிகாரிகள் சம்பவ இடத்தில் கண்காணித்த போது எதிர்பாராத விதமாக தாய் யானை மயங்கி விழுந்தது. தாய் யானையின் உடலில் சிறிது நேரத்திற்குப் பின் அசைவு தெரிந்தது. கால்நடை மருத்துவ குழுவினர் முதல் கட்ட சிகிச்சை அளித்தனர். உடல் நல குறைவால் யானையால் எழுந்திருக்க முடியவில்லை. கோவை வனக் குழுவினர் இரவு முழுதும் தாய் யானையை கண்காணித்து வந்தனர். இன்று அதிகாலை முதல் ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மே 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை