உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புனிதநீர், விபூதி பிரசாதம் கூட கிடைக்கவில்லை என பக்தர்கள் அதிருப்தி

புனிதநீர், விபூதி பிரசாதம் கூட கிடைக்கவில்லை என பக்தர்கள் அதிருப்தி

கோவை, மருதமலை முருகன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர். சிறப்பு அனுமதி சீட்டு வைத்து இருந்தவர்கள் மட்டும் வாகனங்களில் சாலை வழியாக மலை கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். சாதாரண பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிகட்டுகள் வழியாக செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து வைத்து பின்னர் அனுமதித்தனர். படி வழியாக சென்றவர்களும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோயில் முன், படிகளிலேயே நிறுத்தப்பட்டனர். கும்பாபிஷேகம் முடிந்த பின்னரே தரிசனத்திற்கு செல்ல அனுப்பப்பட்டனர். சிறப்பு பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டும் உள்ளே விடப்பட்டனர். அதுவும்கூட அனைத்தும் திமுககாரர்களுக்கே வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. விடிய விடிய காத்திருந்தவர்கள் முருக பெருமானை தரிசிக்க கூட முடியாதபடி போலீசார் அப்புறப்படுத்தினர். புனித நீர், விபூதி கூட கிடைக்கவில்லை என பக்தர்கள் தெரிவித்தனர். மருதமலை கும்பாபிஷேகத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்த நிலையில் போதுமான பஸ் வசதி இல்லாமல் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

ஏப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை