/ தினமலர் டிவி
/ பொது
/ மூத்தோர் தடகளத்தில் சாதிக்கும் 86 வயது இளைஞர்! Masters Athletics | 86 Years Old Man | Chenna i
மூத்தோர் தடகளத்தில் சாதிக்கும் 86 வயது இளைஞர்! Masters Athletics | 86 Years Old Man | Chenna i
சென்னையை சேர்ந்தவர் சுப்ரமணியன். வயது 86. சிறுவயது முதலே தடகளத்தில் ஆர்வம் மிக்கவர். பள்ளி, கல்லூரிகளில் தடகள போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை குவித்துள்ளார். தற்போது வயது 86 ஆன நிலையிலும் தடகளத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். இதற்காக தினமும் உடற்பயிற்சி, ஜிம் என சுறுசுறுப்பாக வலம் வருகிறார். 86 வயதில் மூத்தோர் தடகளத்தில் சுப்ரமணியன் பல்வேறு பதக்கங்களை குவித்து வருகிறார். பிலிப்பைன்ஸ்சில் நடந்த ஆசிய மூத்தோர் தடகளத்தில் 4 தங்க பதக்கம் வென்று அசத்தி உள்ளார். உலக மூத்தோர் தடகளத்திலும் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.
அக் 30, 2024