குப்பை சேகரித்த ராஜாவுக்கு அபாய்ன்ட்மென்ட் ஆர்டர்!
சுகாதார அமைச்சரு மா சுப்ரமணியன் சென்னையில எப்பவும்போல இன்னைக்கு வாக்கிங் போயிட்டு இருந்தாரு. வழியில குப்பைத்தொட்டியில பேப்பர், பிளாஸ்ட்டி வேஸ்ட்கள சேகரிச்சிட்டு இருந்த ஒருத்தரு, அமைச்சர பாத்ததும் அடையாளம் கண்டுகிட்டார். குப்பை மூட்டையை தோள்ல சுமந்தபடி, ஐயா வணக்கமுங்கன்னு சொல்லியிருக்கார். அவரோட பேச்சு கொடுத்த அமைச்சர், அவரை பத்தி விசாரிச்சாரு. பேரு ராஜா . சொந்த ஊரு திருச்சி. தினமும் பேப்பர், பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து கொடுத்து அந்த காசுல, கிடைக்குறத சாப்பிட்டு, ரோட்டோரமா படுத்துப்பேன். எனக்கென்னு யாரும் இல்லீங்கய்யான்னு செல்லி இருக்காரு. வேல கொடுத்தா செய்வீங்களான்னு அமைச்சர் கேட்க, ராஜாவும் சரிங்கன்னு சொல்லிட்டார். அமைச்சர் தன்னோட கார்லயே தொழிலாளர் குடியிருப்பு வீட்டுக்கு கூட்டீட்டு போனார்.