உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மா.சுப்பிரமணியன் வழக்கில் தள்ளிப்போன குற்றச்சாட்டு பதிவு | Minister Ma.Subramanian | Land grab case

மா.சுப்பிரமணியன் வழக்கில் தள்ளிப்போன குற்றச்சாட்டு பதிவு | Minister Ma.Subramanian | Land grab case

சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு சிட்கோ நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, முறைகேடான ஆவணங்கள் மூலம் மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்ததாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியன், மனைவி காஞ்சனா மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் 2019ல் போலீஸ் தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு கோர்ட் நீதிபதி பிரபாகரன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரின் மனைவி மீது மே 23ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு கோர்ட்டின் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டு, நீதிபதி வேங்கடவரதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, விசாரணையை ஜூன் 17ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு சிறப்பு கோர்ட்டின் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதால் இன்று நடப்பதாக இருந்த குற்றச்சாட்டு பதிவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மே 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை