மத்தூரம்மா கோயில் தேர் ஊர்வலத்தில் அசம்பாவிதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே ஹூஸ்கூரில் மிகப்பழமையான மத்தூரம்மா கோயில் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள 48 கிராம மக்கள் காக்கும் தெய்வமாக வழிபடுகின்றனர். இக்கோயிலில் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. ஒவ்வொரு கிராமத்தினரும் தனித்தனியாக தேர் அமைத்து கோயிலுக்கு இழுத்து வருவது வழக்கம். இன்று 7 கிராமங்களில் இருந்து தேர்கள் டிராக்டர் மற்றும் களைகளை பூட்டி இழுத்து வரப்பட்டன. ஒவ்வொரு தேரும் 130 அடி முதல் 150 அடிவரை உயரம் உடையவை. தொட்ட நாகமங்கலா மற்றும் ராயசந்திரம் கிராமத்தில் இருந்து ஹூஸ்கூர் மத்தூரம்மா கோயிலுக்கு இழுத்து வரப்பட்ட 2 தேர்கள் பலத்த காற்றின் காரணமாக அடுத்தடுத்து சாய்ந்து கீழே விழுந்தன. breath
மார் 22, 2025