/ தினமலர் டிவி
/ பொது
/ புட்டு புட்டு வைத்த கனடா எதிர்கட்சி தலைவர் | Maxime Bernier | Nijjar | Justin Trudeau
புட்டு புட்டு வைத்த கனடா எதிர்கட்சி தலைவர் | Maxime Bernier | Nijjar | Justin Trudeau
சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என கேட்டு காலிஸ்தான் பயங்கரவாத இயக்கம் சதி செயல்களில் ஈடுபட்டுள்ளது. கனடாவில் 2022 ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார். இந்தியாவுக்கு இதில் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் உட்பட 6 அதிகாரிகளை வெளியேற்றினார். கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. கனடாவின் செயலுக்கு பதிலடியாக இந்தியாவில் இருந்து 6 கனடா தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர்.
அக் 19, 2024