/ தினமலர் டிவி
/ பொது
/ மழையோடு போன நெல் மூட்டைகள்: மனம் குமுறும் விவசாயி | Mayiladuthurai rain damage
மழையோடு போன நெல் மூட்டைகள்: மனம் குமுறும் விவசாயி | Mayiladuthurai rain damage
மயிலாடுதுறை மாவட்டத்தில் 96 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இப்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடக்கும் நிலையில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழக அரசின் நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் 140 இடங்களில் அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இவற்றில் 80 நெல் கொள்முதல் நிலையங்கள் நிரந்தர கட்டிடத்திலும், 60 நெல் கொள்முதல் நிலையங்கள் தற்காலிக இடத்திலும் செயல்படுகிறது. தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் தகரத்தினால் அமைக்கப்பட்ட கொட்டகையில் இயங்கி வருகிறது.
செப் 13, 2025