உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மயிலாடுதுறையில் தவாக நிர்வாகி வெட்டி சாய்ப்பு-பதற்றம் | mayiladuthurai manimaran | pmk devamani case

மயிலாடுதுறையில் தவாக நிர்வாகி வெட்டி சாய்ப்பு-பதற்றம் | mayiladuthurai manimaran | pmk devamani case

0433 பட்டா கத்தி வீசி தவாக நிர்வாகி சரிப்பு காரை மறித்து கதை முடித்த பயங்கரம் மயிலாடுதுறையில் சம்பவம் பழிக்குப்பழியாக அதிர்ச்சி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறை சேர்ந்தவர் மணிமாறன் வயது 34. தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்தவர். இன்று மயிலாடுதுறையில் நடந்த கட்சியினர் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் வந்தார். நிகழ்ச்சி முடிந்து மீண்டும் காரைக்கால் திரும்பி கொண்டிருந்தார். செம்பனார்கோயில் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிர வந்த 2 கார்கள், மணிமாறன் வந்த காரை வழிமறித்தன. காரில் இருந்து திபுதிபுவென இறங்கிய கும்பல், மணிமாறன் கார் கண்ணாடியை பட்டா கத்தியால் அடித்து நொறுக்கியது. காருக்குள் இருந்த மணிமாறனை வெளியே இழுத்து போட்டு, சரமாரியாக வெட்டியது. தலை, கழுத்து, உடலில் வெட்டு விழுந்தது. ரத்தவெள்ளத்தில் சரிந்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த கொலையாளிகள் வந்த காரில் ஏறி தப்பி சென்றனர். வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. செம்பனார் கோயில் போலீசார், மணிமாறன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க உடனடியாக 5 தனிப்படை அமைக்கப்பட்டன. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. பழிக்குப்பழியாக மணிமாறன் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கூறினர். அதாவது, 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருநள்ளாறில் தேவமணி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர் பாமகவின் காரைக்கால் மாவட்ட செயலாளராக இருந்தார். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் பக்கத்தில் தான் அவரது வீடு. அதே ஏரியாவில் பாமக கட்சி ஆபீஸ் இருக்கிறது.

ஜூலை 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை