உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேயர்கள் கொடுத்த ராஜினாமா கடிதம்?: பின்னணி என்ன?

மேயர்கள் கொடுத்த ராஜினாமா கடிதம்?: பின்னணி என்ன?

திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் சரவணன் மீது ஏற்கனவே, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ஜனவரியில் ஓட்டெடுப்பு நடைபெற இருந்த நிலையில், திமுக தலைமை உத்தரவின்படி, அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் கவுன்சிலர்களிடம் பேசி சமாதானப்படுத்தினர். இதையடுத்து, நம்பிக்கையில்லா தீர்மான ஓட்டெடுப்பில் அவர்கள் பங்கேற்கவில்லை. தீர்மானம் தோல்வி அடைந்தது. அதன் பிறகும், திருநெல்வேலி மேயர் சரவணனுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கிறது. சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்திற்கு 10 கவுன்சிலர்கள் மட்டும் வந்தனர். பெரும்பான்மை இல்லாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ஜூலை 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ