சென்னை தொழில் வர்த்தக சபையின் 189ம் ஆண்டு விழா கொண்டாட்டம்! MCCI | Chennai | 189 Annual General Me
எம்.சி.சி.ஐ. எனும் சென்னை தொழில் வர்த்தக சபையின் 189ம் ஆண்டு விழா, நிர்வாக இயக்குனர் ராம்குமார் ஷங்கர் தலைமையில் சென்னையில் நடந்தது. இதில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை செயலர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக கலந்து கொண்ட செயின்ட் கோபைன் சி.இ.ஒ சந்தானம், மறு வடிவமைக்கப்பட்ட எம்சிசிஐ இணையதள பக்கத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பல்வேறு வணிக நிறுவனங்களை சார்ந்த நிர்வாகிகள் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை செயலர் கிருஷ்ணன் பேசியதாவது: சென்னை தொழில் வர்த்தக சபையுடன் இணைந்து, பரந்தூர் விமான நிலையம் உட்பட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.