பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு ஏன்? | Afghan Minister | MEA Issues Clarification
ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முட்டாகி 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் உள்ள ஆப்கன் தூதரகத்தில் அவர் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது பெண் நிருபர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆண் பத்திரிகையாளர்கள் மட்டுமே நிருபர்கள் சந்திப்பில் பங்கேற்றனர். பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியது. ஆப்கனில் பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. இங்கேயும் அப்படி கடை பிடிக்கப்பட்டதா என கேள்விகள் எழுந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல், எம்பி பிரியங்கா, திரிணமுல் எம்பி மஹூவா மொய்தரா உள்ளிட்டோர் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். பிரதமர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி பிரியங்கா வலியுறுத்தினார். இந்த சூழலில் வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. ஆப்கன் வெளியுறவு அமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியுறவு அமைச்சகத்துக்கு எந்தப் பங்கும் இல்லை. அந்த நிகழ்வு முழுக்க தூதரகத்தின் கட்டுப்பாட்டில் நடந்தது என மத்திய அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர். #AfghanMinister | #MEA | #NewDelhi | #Pressconference | #AmirKhanMuttaqi