டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு! | National Medical Commission | Medical College
கொல்கத்தா டாக்டர் சம்பவம் அதிரடியாக பறந்த சுற்றறிக்கை கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். இதை கண்டித்து மாநிலம் முழுதும் பல மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை உத்தரவுபடி இந்த விவகாரத்தில் தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள்; மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஆஸ்பிடல் கேம்பசுக்குள் மாணவர்கள், டாக்டர்களின் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக செல்ல கேம்பசுக்குள் தேவையான இடங்களில் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும். வார்டு, ஹாஸ்டல், குடியிருப்புகளில் பாதுகாப்புக்கு இரு செக்யூரிட்டிகள் இருக்க வேண்டும். மருத்துவ மாணவர்களுக்கு எதிராக எந்த ஒரு வன்முறை சம்பவம் நடந்தாலும் உடனே கல்லூரி நிர்வாகம் விசாரிக்க வேண்டும்.