/ தினமலர் டிவி
/ பொது
/ மருத்துவ கழிவுகள் எரிப்பு; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் | Medical waste | Tirunelveli | Kerala
மருத்துவ கழிவுகள் எரிப்பு; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் | Medical waste | Tirunelveli | Kerala
திருநெல்வேலியில், மானூர் மதவகுறிச்சி அருகே ஆலங்குளம் செல்லும் சாலையோரம், காலாவதியான மாத்திரைகள், டானிக்குகள், சிறிஞ்சுகள் அதிகளவு கொட்டப்பட்டுள்ளன. மருத்துவ கழிவுகளை எரிக்க முயற்சி செய்யப்பட்ட நிலையில் பாதி எரிந்த நிலையில் கிடந்தன. மருத்துவ கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே எச்சரித்து இருந்த நிலையில், அதை மீறி மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. இவற்றை கொட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மார் 29, 2025