உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆல்கஹால் கலந்த மருந்துகள் இனி ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் | Medicines | Cough Syrup | Central Govt

ஆல்கஹால் கலந்த மருந்துகள் இனி ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் | Medicines | Cough Syrup | Central Govt

மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஷெட்யூல் கே எனும் பிரிவின் கீழ் 12 சதவீத ஆல்கஹால் கொண்ட மருந்துகளை தளர்வுகளுடன் விற்பனை செய்ய அனுமதி அளிந்திருந்தது. இருமல், சளி உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு அதிக எத்தில் ஆல்கஹால் பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் போதைக்காக பயன்படுத்தப்படுவதாக மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து மருந்துகளில் ஆல்கஹால் பயன்பாட்டையும், அதன் விற்பனையில் கட்டுப்பாடுகளையும் விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. 12 சதவீதத்துக்கும் மேல் ஆல்கஹால் கலந்த மருந்துகளை தன்னிச்சையாக வாங்கவோ, விற்கவோ முடியாது எனும் வகையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் அந்த மருந்துகளை விற்பனை செய்ய முடியாது. இந்த புதிய விதிகள் 2027 ஜனவரி முதல் அமலுக்கு வருகின்றன. #cough_syrup #ethyl_mixed_tablets #Tablets_regulation #New_rules_for_drugs #Drugs_control #alchohol #Drugs_abuse #Central_govt #Bjp #new_govt_rules #politicalnews #Nationalnews #crimenews #breakingnews

ஜூலை 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை