/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழ் புத்தாண்டு தினத்தில் மீனாட்சிக்கு பட்டுசேலை சாத்தி வழிபட பக்தர்கள் ஆர்வம்! Meenakshi Amman
தமிழ் புத்தாண்டு தினத்தில் மீனாட்சிக்கு பட்டுசேலை சாத்தி வழிபட பக்தர்கள் ஆர்வம்! Meenakshi Amman
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மீனாட்சியம்மன் வைர கீரிடம், முத்துமாலை, தங்கப்பாவாடை உள்ளிட்டவை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். சுந்தரேஸ்வரர் வைர, வைடூரிய ஆபரணங்களுடன், வைர நெற்றிப்பட்டை அணிந்து அருள்பாலித்தார். தமிழ் புத்தாண்டு தினத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டுச்சேலை சாத்தி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வம் காட்டினர். சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில், அழகர்கோயில், பழமுதிர்சோலை முருகன் கோயில் ஆகியவற்றிலும் புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஏப் 14, 2025