/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரை சித்திரை திருவிழாவில் தேரோட்டம் களைகட்டியது! Meenakshi Temple | Chithirai Car Festival
மதுரை சித்திரை திருவிழாவில் தேரோட்டம் களைகட்டியது! Meenakshi Temple | Chithirai Car Festival
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம் முடிந்து நேற்று மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் விமர்சையாக தொடங்கியது. அதிகாலையில் கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சிஅம்மனும், சுந்தரேசுவரரும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வந்தனர்.
மே 09, 2025