மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திரண்ட பக்தர்கள் |Meenatchi sokkanathar temple| Kumbabishegam|Trichy
திருச்சி லால்குடி அருகே, நம்புகுறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது 400 ஆண்டுகள் பழமையான மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில். இங்கு மதுரை மீனாட்சியம்மன் சொக்கநாதர் திருமேனியும், காளகஸ்தீஸ்வரர் பெரிய லிங்கமும் உள்ளது. இது தோஷம் நீக்கி நிவர்த்தி செய்யவல்ல சக்தி உடையதாக நம்பப்படுகிறது. கோயிலின் பின்புறத்தில் நந்தி ஆறும், கோயிலுக்குள் உரக்கேணி தீர்த்தம் அமைந்திருப்பதும் விசேஷம். காளஹஸ்திக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு சென்று ராகு, கேது, பரிகாரங்களை செய்யலாம். அப்படிப்பட்ட இந்த திருத்தலம், 50 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்து கிடந்தது. இதை நம்புக்குறிச்சி சின்னசாமியின் மூத்த மகன் பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர் பிரசன்னம் தலைமையில் கிராம மக்கள் சார்பில் புனரமைத்து இன்று கும்பாபிஷகம் செய்யப்பட்டது. கடந்த 5ம் தேதி காலை கணபதி நவகிரக ஹோமங்களுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. இன்று காலை 6 மணிக்கு கும்பாபிஷேகத்துக்கான பல்வேறு பூஜைகள் நடந்து, 9 மணிக்கு யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடந்தது.