மேகாலயாவில் மாயமான மனைவி உபியில் சிக்கிய பின்னணி | Meghalaya | honeymoon murder case | CBI Enquiry
மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜா ரகுவன்ஷி. சமீபத்தில் சோனம் என்பவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஹனிமூனுக்காக மே 22ல் மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டம் சென்றனர். அங்குள்ள ஷில்லாங் நகரத்தில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர். மறுநாள் மே 23 அன்று ஒரு வாடகை டூ வீலர எடுத்துக்கொண்டு சிரபுஞ்சி சென்றனர். அன்று மாலை மவ்லக்கியத் என்ற கிராமத்துக்கு சென்ற இருவரும், அங்கிருந்து மலையேற்ற சுற்றுலா சென்றனர். அதன் பிறகு அவர்களைக் காணவில்லை. மேகாலயா போலீசார் வழக்குப் பதிவு செய்து புதுமண தம்பதியை தேடினர். மே 24ம் தேதி அவர்கள் பயன்படுத்திய டூவீலர் சோஹ்ராரிம் என்ற இடத்தில் கிடைத்தது. அந்த பகுதியில் மேலும் தேடியபோது வெய்சாவ்டோங் நீர் வீழ்ச்சிக்கு அருகில் இருந்த பள்ளத்தாக்கில் ராஜா ரகுவன்ஷி உடல் கண்டெடுக்கப்பட்டது. ராஜா ரகுவன்ஷி மனைவி சோனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தப் பகுதியில் இருந்த ஒரு சுற்றுலா கைடு கொடுத்த தகவல் போலீசாருக்கு அதிர்ச்சியைத் தந்தது. 3 ஆயிரம் அடி உயரம் உள்ள ஒரு இடத்துக்கு அவர்களைக் கூட்டிச் செல்ல அந்த கைடு விரும்பியதாகவும், அதற்கு சோனம் வேண்டாம் என கூறி இருக்கிறார். அந்த தம்பதியுடன் மேலும் 3 பேர் இருந்ததாகவும் அந்த சுற்றுலா கைடு கூறினார். இந்த திருப்பம் நிறைந்த தகவலுடன் மேகாலயா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, மத்திய பிரதேசத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேகாலயாவில், ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியுடன் சென்றதாகவும், சோனம் சொல்லி ராஜா ரகுவன்ஷியை கொலை செய்துவிட்டு தப்பியதாகவும் கைதானவர்கள் போலீசாரிடம் கூறினர்.