உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெல்ஜியத்தில் சிக்கினார் வைர வியாபாரி! | Mehul Choksi Arrest In Belgium | PNB bank loan fraud case

பெல்ஜியத்தில் சிக்கினார் வைர வியாபாரி! | Mehul Choksi Arrest In Belgium | PNB bank loan fraud case

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி. இவரது மாமா மெஹுல் சோக்சி. மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று 2018ல் வெளிநாடு தப்பினர். வெளிநாட்டில் இருந்து வைரம் இறக்குமதி செய்வதாக வங்கி அதிகாரிகளை நம்பவைத்து போலி ஆர்டர்களை காண்பித்து மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நீரவின் சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.

ஏப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ