உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேல்பாதி தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த பட்டியலின மக்கள்! Melpathi| Villupuram

மேல்பாதி தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த பட்டியலின மக்கள்! Melpathi| Villupuram

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலில் 2023ல் பட்டியலின மக்கள் தரிசனம் செய்த போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் போலீசார் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். முயற்சிகள் தோல்வி அடைந்ததால் கோயில் மூடப்பட்டது. இதையடுத்து பட்டியலின மக்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இருதரப்பினரும் சாமி தரிசனம் செய்யலாம் என கடந்த பிப்ரவரி மாதம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. இதன்பேரில் இருதரப்பினரையும் கோயிலுக்குள் அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கோவிலில் 22 சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டு இருதரப்பினரும் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று பட்டியலின மக்கள் தரிசனம் செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின் கோயிலுக்கு உள்ளே சென்று திருப்தியாக தரிசனம் செய்ததாக அவர்கள் கூறினர்.

ஏப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை