உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மனைவி சமாதியுடன் கூடிய வீடு கட்டி வாழும் காதல் கணவன் | Husband built house | House for deceased wife

மனைவி சமாதியுடன் கூடிய வீடு கட்டி வாழும் காதல் கணவன் | Husband built house | House for deceased wife

இறந்த மனைவியின் ஆசையை நிறைவேற்றி வைத்த கணவன் செல்வி துளசி வனமாக மாறிய சமாதி ராணிப்பேட்டை மாவட்டம் துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி, வயது 52. பில்டிங் கான்ட்ராக்டர். மனைவி செல்வி உடல்நிலை சரியில்லாமல் போனதால் கடந்த ஆண்டு மார்ச் 5ல் இறந்தார். அவருக்கு வயது 51. இந்த தம்பதிக்கு நிஷானி என்ற மகள் உள்ளார். அவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து துறையூரிலேயே கணவருடன் வசிக்கிறார். பழனியின் மனைவி செல்வி உயிருடன் இருந்த காலத்தில் ஒரு அழகிய தனி வீடு கட்ட வேண்டும் என்று ஆசை பட்டாராம். மனைவி மீது கொண்ட பேரன்பால் அவரது உடலை துறையூர் அருகில் உள்ள தனது நிலத்தில் புதைத்த பழனி, மனைவியின் முதல் நினைவு தினம் வருவதற்குள் அவர் ஆசைப்படியே வீடு கட்ட முடிவு செய்தார். மனைவியை புதைத்த இடத்திலேயே சமாதியுடன் பெட்ரூம், கிச்சன் என அனைத்து வசதிகளுடன் அழகான வீட்டை கட்டி முடித்தார். அந்த வீட்டுக்கு செல்வி துளசி வனம் எனவும் பெயர் வைத்தார். திட்டமிட்டபடி மனைவியின் முதல் நினைவு நாளான மார்ச் 5ல் வீடு திறப்பு விழாவையும் வெற்றிகரமாக நடத்திவிட்டார் பழனி. வீடு முழுதும் சுவரில் மனைவியின் போட்டோக்களை மாட்டி வைத்துள்ளார். வீட்டில் எங்கு திரும்பினாலும் மனைவி செல்வியின் உருவம் தெரியும்படி அலங்கரித்து அவரது நினைவுகளுடன் வாழ்ந்து வருகிறார். திருமணம் ஆன சில மாதங்கள், வருடங்களிலேயே விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு செல்லும் நிலை இப்போது அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட காலத்தில், இறந்த மனைவி தன்னோடு வாழ்வதாக நினைத்து சமாதியுடன் வீடு கட்டி அதில் வாழ்ந்து வரும் பழனியை அனைவரும் வியந்து பாராட்டுகின்றனர்.

மார் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ