உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மெட்ரோ பணிகள் காரணமா? - விசாரணையை துவங்கியது மெட்ரோ நிர்வாகம் Chennai | Thiruvanmiyur | giant pit

மெட்ரோ பணிகள் காரணமா? - விசாரணையை துவங்கியது மெட்ரோ நிர்வாகம் Chennai | Thiruvanmiyur | giant pit

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் திருவான்மியூர் டைடல் பார்க் சிக்னல் அருகே ஓஎம்ஆர் சாலையில் திடீரென 10 அடி ஆழத்துக்கு ராட்சத பள்ளம் உருவானது. அப்போது அந்த வழியே சென்ற கார், அந்த பள்ளத்தில் சிக்கி தலைக்குப்புற கவிழ்ந்தது. கார் லேசாக கவிழும்போதே உஷாரான டிரைவர் வெளியே குதித்ததால் லேசான காயத்துடன் தப்பினார். பின்னர் கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்து கார் வெளியே எடுக்கப்பட்டது.

அக் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !