உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஷட்டர் பழுதானதால் வீடுகளுக்குள் புகுந்த நீர்! Mettupalayam | Heavy Rain | Bhavani River

ஷட்டர் பழுதானதால் வீடுகளுக்குள் புகுந்த நீர்! Mettupalayam | Heavy Rain | Bhavani River

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்வதால் பவானி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே வெள்ளிப்பாளையம் என்ற இடத்தில் நீர் மின் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்த நிலையில், ஷட்டர் பழுதானதால் அதனை திறக்க முடியவில்லை. இதனால் உபரிநீர் ஆற்றின் கரையை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் தேங்க தொடங்கியது. இதனால் ரங்க ராயன் ஓடை, சுப்பிரமணியர் கோயில், சந்தக்கடை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் நீர் புகுந்தது. திடீரென அதிகாலையில் வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் தூங்கி கொண்டிருந்த மக்கள் செய்வது அறியாது வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

நவ 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை