/ தினமலர் டிவி
/ பொது
/ 6 கண் மதகுகள் வழியாக சீறி பாயும் உபரி நீர் | Mettur dam | Reaches full capacity
6 கண் மதகுகள் வழியாக சீறி பாயும் உபரி நீர் | Mettur dam | Reaches full capacity
தென்மேற்கு பருவமழை 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளாவில் இந்த ஆண்டு முன்பே பெய்ய தொடங்கியது. கர்நாடகாவிலும் இப்போது தொடர் பருவமழை பெய்வதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதனால் பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 60 ஆயிரத்து 740 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 80 ஆயிரத்து 984 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
ஜூன் 29, 2025