மேவாட் கொள்ளையர்களின் பின்னணி: பகீர் தகவல்கள் | Mewat Gang | ATM Theft | Kerala | TN Police
கை வைத்த இடமெல்லாம் கன்னிவெடி சும்மா புகுந்து விளையாடி இருக்காங்க கேரளாவின் திருச்சூர் ஏடிஎம்களில் கொள்ளையடித்த கும்பல் கடந்த வாரம் தமிழகத்தில் சிக்கியது. 67 லட்சத்துடன் கண்டெய்னர் லாரியில் வந்த அவர்களை நாமக்கல் போலீசார் சுற்றி வைத்து கைது செய்தனர். தப்பி செல்ல முயன்ற கும்பல் மீது துப்பாக்கி சூடு நடந்ததில் கொள்ளையன் ஜூமான் இறந்தான். அசீன் என்ற இன்னொரு கொள்ளையன் குண்டு காயத்துடன் பிடிபட்டான். கன்டெய்னர் லாரிக்குள் இருந்த மேலும் 5 கொள்ளையன்களும் கைது செய்யப்பட்டனர். லாரிக்குள் ஒரு சொகுசு காரும், கொள்ளையடித்த 66 லட்சம் பணமும் இருந்தது. பிடிபட்டவர்கள் ஹரியானாவின் மேவாட் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. இவர்கள் கொள்ளை அடிப்பதையே தங்களின் பாரம்பரியமாக கொண்டவர்கள். வடமாநிலங்களில் திருட்டு தொழிலுக்கு கடும் போட்டி நிலவியதால் தென் மாநிலங்களை நோக்கி வந்துள்ளனர். 3 மாதத்துக்கு முன் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் 6 ஏடிஎம்களில் நடந்த கொள்ளைக்கும் இவர்களே காரணம். சொகுசு காரை பயன்படுத்தி கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். நாமக்கல்லில் சிக்கிய அதே கண்டெய்னர் லாரியை தான் விசாகப்பட்டினம் கொள்ளையிலும் பயன்படுத்தி உள்ளனர். அங்கு மட்டும் அவர்கள் கொள்ளையடித்த பணம் ஒன்றரை கோடிக்கு மேல் இருக்கும்.