உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரான் மக்களுக்காகவே போர்; யாரும் செய்யாததை செய்கிறேன்

ஈரான் மக்களுக்காகவே போர்; யாரும் செய்யாததை செய்கிறேன்

அணு ஆயுதங்கள் தயாரிப்பதை கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் போரை தொடங்கி இருக்கிறது. அமெரிக்காவுடன் இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது குண்டுமழை பொழிகிறது. இது தொடர்பாக, வீடியோவில் பேசியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் படைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முன்னணி நாடாக ஈரான் உள்ளது. அந்த நாடு அணு ஆயுத தயாரிப்பில் வலிமை பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளோம். இஸ்லாமிய புரட்சிகர படைக்கும், ஈரான் போலீசுக்கும் நான் சொல்வது இதுதான். இரவுக்குள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் மரியாதையாக நடத்தப்படுவீர்கள். இல்லையென்றால் மரணம் நிச்சயம். #Israel #Iran #IsraelIranConflict #MiddleEastTension #MiddleEastCrisis #WarAlert #AirStrike

பிப் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை