உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேல் தலையில் அமெரிக்கா போட்ட குண்டு israel vs hamas | palestine recognition | trump on west bank

இஸ்ரேல் தலையில் அமெரிக்கா போட்ட குண்டு israel vs hamas | palestine recognition | trump on west bank

காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் கடத்தி சென்ற பிணைக்கைதிகளை மீட்கவும்; பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழிக்கவும் 2 ஆண்டுகளாக இஸ்ரேல் போரை நடத்தி வருகிறது. பாலஸ்தீன் நாட்டின் ஒரு பகுதியான காசாவை அபகரிக்கும்நோக்குடன் இஸ்ரேல் செயல்படுவதாக பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதே நேரம் ஹமாஸ் பயங்கரவாதிகளை வழிக்கும் வரை காசாவில் போரை நிறுத்தமாட்டோம் என்று இஸ்ரேல் சொல்கிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில், ஐநா சபையில் காசா, மேற்கு கரையை உள்ளடக்கி பாலஸ்தீனை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வந்த கனடா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட முக்கிய நாடுகள் பாலஸ்தீன் ஆதரவு கோஷத்தை இப்போது முன்னெடுத்துள்ளன. இது இஸ்ரேலுக்கு கடும் ஆத்திரத்தை உண்டு பண்ணி இருக்கிறது. பாலஸ்தீன் நாடு உருவாவதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம். அது பயங்கரவாதிகளுக்கு புகழிடம் கொடுக்கும் செயல் என்று இஸ்ரேல் வசைபாடி வருகிறது.

செப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ