உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மறைந்து தாக்கும் வடமாநில தொழிலாளர்கள்: சென்னையில் பரபரப்பு | Kattuppalli | Migrant worker

மறைந்து தாக்கும் வடமாநில தொழிலாளர்கள்: சென்னையில் பரபரப்பு | Kattuppalli | Migrant worker

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் தனியார் கப்பல் கட்டும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கே உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அமரேஷ் பிரசாத் ஒப்பந்த ஊழியராக பணியாற்றினார். அருகிலேயே வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பில் வசித்து வந்தார். திங்களன்று இரவு வீட்டுக்கு சென்ற அமரேஷ் மாடி ஏறும் போது தவறி கீழே விழுந்து இறந்தார். அவரது சடலத்தை மீட்ட காட்டூர் போலீசார் சென்னை ஸ்டான்லி ஆஸ்பிடலுக்கு அனுப்பினர். இதனிடையே விசாரணைக்காக நள்ளிரவில் அங்கு விசாரணைக்கு சென்ற போலீசார் மீது கற்களை வீசி வடமாநில தொழிலாளர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இறந்த அமரேஷ் பிரசாத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி 1000க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டதால் பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போது அவர்கள் மீது வட மாநில தொழிலாளர்கள் கற்களை வீசினர்.

செப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி